internet

img

கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க சிற்றலை

சிற்றலை வானொலி நிலையங்களில் பல வகைகள் உண்டு, சில வானொலிகள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பும், சில வானொலி நிலையங்கள் செய்திகளுக்காக உள்ளன, ஆனால் தன் நாட்டிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட தன் மக்களை மீட்க ஒரு நாடு வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பி அவர்களை தேடி வருகிறது.

ஜப்பான் நாட்டு மக்கள் சிலரை வடகொரியா அரசு கடத்தி சென்று விட்டதாக ஜப்பான் அரசு தன் இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது (http://www.rachi.go.jp/en/shisei/radio/index.html).

வடகொரியாவில் சிறைப்பிடிக்கப்படுபவர்களுக்கான ஜப்பான் மக்களுக்கு சிற்றலை வானொலி ஒலிபரப்பு மூலம் ஜப்பான் அரசாங்கத்தால் இந்த நிகழ்ச்சி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் புதிய தகவல்களை அளிக்கிறது, கடத்தப்பட்ட ஜப்பானியர் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், வடகொரியாவில் உள்ள சூழ்நிலை, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் நண்பர்கள் பற்றிய செய்திகள், அத்துடன் பிரபலமான ஜப்பானிய பாடல்களைத் இந்த நிகழ்ச்சி உள்ளடக்கியது.

இந்த நிகழ்ச்சி தினமும் இந்திய நேரப்படி மாலை 7 மணி முதல் 7.27 மணி வரை 7295 கிலோஹெர்ட்ஸ், 9705 கிலோஹெர்ட்ஸ், 9965 கிலோஹெர்ட்ஸ் என்ற அலைவரிசைகளிலும் மாலை 8 மணி முதல் 8.30 மணி வரை கேட்கலாம்.

இந்த முப்பது நிமிட ஒளிபரப்பில் ஜப்பான் மொழியில் அதிகமான கருத்துக்கள் இடம்பெறுகின்றன, அறிக்கைகள் மற்றும் இசைத் தொகுப்புகளின் ஒலி விளைவுகள் ஆகியவை இதில் அடங்கும். வடகொரியா கடத்தப்பட்ட ஜப்பானிய குடிமக்களின் இடங்களை கண்டுபிடிப்பதற்கும், இறுதியில் அவர்களது விடுதலையை பாதுகாப்பதற்கும் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது பற்றியும் இந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படுகிறது.

ஜப்பானிய அரசு வடகொரியா இதுவரை 17 ஜப்பானியர்கள் கடத்தியுள்ளதாகவும் அவர்களை வடகொரியா உடனே விடுவிக்கவேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தது. அதுமட்டுமல்லாது மேலும் பல ஜப்பானியர்களை வடகொரியா கடத்தியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகக் கூறியிருக்கிறது.

ஜப்பான் நாட்டினர் கடத்தப்பட்டது பற்றி தகவல்கள் திரட்ட மற்றும் அது சம்பந்தமான விடயங்களுக்கு என்று ஜப்பான் அரசாங்கம் ஒரு வெளியுறவுத் தலைமையிடத்தை அமைத்துள்ளது. இதில் மாநில அமைச்சர்கள் அனைவரையும் உள்ளடக்கி பிரதமர் பதவி வகிக்கும் பிரதம மந்திரி மற்றும் கடத்தல் சம்பந்தமான விடயங்கங்களை கையாளும் சபைத் தலைவர், முதலமைச்சர் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சக செயலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தலைமையகத்தின் ஊடாக, கடத்தல் பிரச்சனை தொடர்பாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை விவாதித்து வருகிறது.

இந்த வானொலியின் நிகழ்ச்சிகளை சிற்றலையில் கேட்டு வெளியுறவுத் தலைமையகத்திற்கு கடிதம் அனுப்பினால் அவர்கள் நாம் அந்த நிகழ்ச்சியை கேட்டதற்கு அடையாளமாக இந்த பிரச்சனை குறித்து ஒரு கடிதமும் மற்றுமொரு வண்ண அட்டையும் நமக்கு அனுப்பிவைக்கின்றனர்.

இந்த வானொலி நிலையம் மூலமும் அது ஒலிபரப்பிவரும் நிகழ்ச்சி மூலமும் இன்றும் வானொலி கேட்கும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ளதையும் அரசுகள் நம்புவதையும் காட்டுகிறது.

சிற்றலை வானொலிகளை மேலும் பலர் குறிப்பாக இளையஞர்கள் கேட்க வேண்டும் என உலகில் உள்ள பல சிற்றலை வானொலி மன்றங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன.

கடத்தப்பட்ட ஜப்பானியர்கள் பற்றிய தகவல்கள் இருந்தால் info@rachi.go.jp என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

;